*பேராயர் கால்ட்வெலின் " வட்டார நற்செய்திக்குழு '' " அமைதி நாள் " ( Quiet Day )*
பேராயர் ஆன பிறகு கால்ட்வெல் இடையன்குடி கிராமத்தில் வசிப்பதைவிட தூத்துக்குடி நகரில் வசிப்பது நல்லது என்று கல்கத்தா ( Calcutta , now Kolkata ) தலைமைப் பேராயர் ஜான்சன் ( E . R . Johnson ) கூறிய ஆலோசனையை அவர் ஏற்றுக்கொண்டார் .
அவர் தனது பொறுப்பிலுள்ள திருநெல்வேலி , மதுரை , திண்டுக்கல் , இராமநாதபுரம் SPG சபைகளை ஒழுங்காகச் சந்தித்து , அக்கறையுடன் மேற்பார்வையிட்டார் .
ஒவ்வொரு வட்டாரத்திலுமுள்ள குருக்கள் , உபதேசிமார் , ஆசிரியர்களுக்குள் அன்பை வளர்ப்பதும் , அவர்கள் செய்து வந்த சிறப்பான பணியின் மீது அவர்களுடைய பற்றுதலை அதிகரிக்கச் செய்வதுமே அவரது வருகையின் முக்கியமான நோக்கமாகஇருந்தது .
மேற்பார்வையிட்ட எந்தப் பகுதியிலும் *" வட்டார நற்செய்திக்குழு ' '* ஒன்றை நிறுவாமல் அவர் திரும்பியதில்லை . - நாசரேத்திலும் பிற இடங்களிலும் ஆவிக்குரிய கூட்டங்களும் *" அமைதி நாள் "* ( Quiet Day ) எனப்படும் ஒடுக்கக் கூட்டங்களும் நடத்தினார் .
குறிப்பாக , பேராயரின் தாழ்மையும் பெருந்தன்மையும் உடன் ஊழியரையும் திருச்சபையார் அனைவரையும் மிகுதியாய்க் கவர்ந்தன !

No comments:
Post a Comment