*' அயல்நாட்டிலிருந்து இங்கே வந்து அவதிப்படும் பரங்கியைப் பாருங்கள் '*
*கால்ட்வெல் அழைப்பும் அவரது நீண்ட நடை பயணமும்*
தமிழ் நாட்டில் சரியான சாலைகள் இல்லாத 19 ஆம் நூற்றாண்டு .
எரிக்கும் வெயிலில் ஒரு வெள்ளைக்கார இளைஞர் சென்னையிலிருந்து நெல்லை மாவட்டம் நோக்கி நடந்து கொண்டிருந்தார் , வழித்தடத்திலுள்ள மணல் அவரது காலணிகளில் ஏறிக்கொள்ள , அவதிப்பட்டார் அவர் காலணிகளைக் கழற்றிவிட்டு நடந்தபோதோ , தரையின் வெப்பத்தால் உள்ளங்கால்களில் கொப்புளங்கள் தோன்றின .
பேருந்து , புகைவண்டி ஆகியவை இல்லாத அக்காலத்தில் மற்ற மேனாட்டவரைப் போல பல்லக்கிலோ , வண்டியிலோ பயணம் செய்யாமல் , நூற்றுக்கணக்கான மைல்களைக் கால் நடையாகவே கடக்க முனைந்த *அந்த விந்தை* மனிதரை உள்ளூர் மக்கள் வழியெங்கும் கூடி வேடிக்கை பார்த்தனர் .
*' அயல்நாட்டிலிருந்து இங்கே வந்து அவதிப்படும் பரங்கியைப் பாருங்கள் ' '* என்று சிலர் சிரித்தனர் .
இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் தன் வழியில் தொடர்ந்தவர் தான் ராபர்ட் கால்ட்வெல் , ( Robert Caldivell ) , இறைவனின் நற்செய்தியை அறிவிக்கத் தமிழ் நாட்டுக்கு தேவ ஊழியராக வந்திருந்த அவர் , தமிழ் மக்களின் பழக்கவழங்கங்களை நேரில் கண்டு , அவர்கள் பேசிய மொழியைக் கேட்டுக் கற்றுக் கொள்ளும் குறிக்கோளுடன் இந்த நீண்ட கடினமான நடைபயணத்தை மேற்கொண்டிருந்தார் .

No comments:
Post a Comment