*நவீன சமுதாயத்தை உருவாக்கிய தலைசிறந்த சிற்பிகளில் கால்ட்வெலும் ஒருவர்*
1838ஆம் ஆண்டு கால்ட்வெல் தென்னிந்தியாவிற்கு வந்தபோது பெரும்பான்மையான மக்கள் அச்சத்திலே மூழ்கியிருக்கக் கண்டார்.
இயற்கை சக்திகளைக் குறித்த அச்சம் , பிற இனத்தவரைக் குறித்த அச்சம் , நோய் , மரணம் , ஆவியுலகம் ஆகிய ஒவ்வொன்றைக் குறித்தும் பேரச்சம் ! இத்தகைய அச்சங்களிலிருந்து தங்களுக்கு விடுதலை தருமாறு தெய்வத்திடம் அம்மக்கள் வேண்டிக் கொள்ளவில்லை ; மாறாக , தங்கள் தெய்வங்களைப் பற்றியும் கூட ஒருவிதமான பயத்தினால் நிறைந்திருந்தனர் .
பெண் பிள்ளைகள் உட்பட , மத இனவேறுபாடின்றி அனைத்து மக்களுடைய கல்விக் கண்களைக் கால்ட்வெல் திறந்துவிட்டார் .
மேலும் , அவர்களுடைய ஆன்மக் கண்களைத் திறக்கவும் பலவிதமான அச்சங்களிலிருந்து அவர்களை விடுவிக்கவும் கால்டுவெல் அயராது உழைத்தார் .
சமுதாயத்தில் இறைப்பற்றும் மனித நேயமும் இணைந்து வளரப் பெருமுயற்சி செய்தார் .
இவ்வாறு நவீன சமுதாயத்தை உருவாக்கிய தலைசிறந்த சிற்பிகளில் கால்ட்வெலும் ஒருவர்.

No comments:
Post a Comment