கொதித்து எழுந்த தாமஸ் கெம்பர் ஐயர்
நெல்லை திருமண்டலத்தில் தாமஸ் கெம்பர் என்று ஒரு குருத்துவ ஊழியர் இருந்தார் .
அவர் ஒரு சிறந்த ஜெப வீரர் . நற்குண , நற் செய்கைகள் நிரம்பப் பெற்றவர் .
இல்லற தருமத்தில் எவரும் அவருக்கு இணையாகார் . அவரது வாழ்வில் தூய்மையும் , ஊழியத்தில் வாய்மையுமிருந்தது .
கெம்பர் ஐயர் ஊழியர்களுக்கென ஒரு தியானக் கூட்டம் நடத்திக் கொண்டிருந்தார் .
அங்கு வந்திருந்த சபை ஊழியர் ஒருவர் கோர்ட்டிற்கான கேஸ் கட்டுகளைக் கக்கத்தில் இடுக்கி வைத்துக் கொண்டு அங்குமிங்குமாகத் திரிந்தார் .
இக்காட்சியைக் கண்ட பக்திமானான கெம்பர் ஐயர் மிகவும் வேதனையுற்றார் .
மறுகூட்டம் ஆரம்பமானது .
அந்த சபை ஊழியர் கேஸ் கட்டுடன் நின்றுகொண்டிருந்தார் .
கெம்பர் ஐயருக்குக் கோபம் கட்டு மீறியது .
தம் பூத உடலை பூமி அதிரத்தக்கதாகக் குலுக்கினார் .
ஐயருக்கு என்னமோ ஏதோ என்று எல்லோரும் பயந்தார்கள் .
ஆனால் ஐயர் மேலும் அதிகமாக உடலைக் குலுக்கிக் கொண்டு அந்த ஊழியரைச் சுட்டிக்காட்டி , கேஸ் கட்டுகளை சுமந்து கொண்டு உலாவுகிற ஊழியனே , இயேசு கிறிஸ்து வரும்பொழுது நீரும் இப்படித்தான் நடுங்குவீர் என்று கூறி மகா பயங்கரமாக உடலை நிலம் அதிர நடுக்கிக் காட்டினார் .
உடன் ஊழியர்கள் யாவரும் பிரமித்தும் பயந்தும் போயினர் .
சிவில் வழக்குகளிலேயே காலங் கடந்தி வந்த அந்த ஊழியரும் அந்நாள் முதல் மனம் மாறினார் .
தகவல் திரட்டி வரலாற்று பார்வையிலிருந்து

No comments:
Post a Comment