புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

இராதாபுரம்

*இராதாபுரம் சேகர ஆரம்பம்*

1864ல் எல்லை உடன்பாடுக்கு உட்பட்டு கூடன்குளம் . யாக்கோபுபுரம் , வடக்கன்குளம் போன்ற 6 கிராமச் சபைகளை நாகர்கோவிலுள்ள லண்டன் மிஷனெரி சங்கம் ( LMS ) இடையன்குடி சேகரத்திற்கு விட்டுக் கொடுத்தது .

கால்ட்வெல் இக்கிராமங்களுக்கு அடிக்கடி சென்று நற்செய்தியை அறிவித்தார் .

நல்ல நிலத்தில் விதைத்த விதைகள் 30 , 60 மற்றும் நூறாக அறுவடை தருவது போல , கால்ட்வெலின் பணியை இறைவன் இயேசு மிகுதியாக ஆசீர்வதித்தார் .

ஒரு - வருடத்திலேயே கூடன்குளத்தில் 100 பேரும் , பிற ஊர்களில் 22 , 32 மற்றும் 70 பேர் கிறிஸ்துவுடன் தங்களைப் புதிதாக இணைத்துக் கொண்டனர் .

" நான் இன்னும் இளமையும் உடல் நலனும் உள்ளவனாக இருந்திருந்தால் இடையன்குடியை வேறொருவர் பொறுப்பிலே விட்டு விட்டு , முழுமையாக இவ்விடங்களிலே பணிபுரிய வந்திருப்பேன் ' ' என்று கால்ட்வெல் குறிப்பிட்டார் .

இந்தக் கிராமங்களைக் கால்ட்வெல் இராதாபுரம் சேகரத்தோடு இணைத்தார் ; தன்னால் பயிற்சி கொடுக்கப்பட்ட சாமுவேல் ஐயரை அவற்றைக் கவனித்துக் கொள்ளும் மிஷனெரியாக நியமித்தார் .

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory