புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

விஷ்வவாணி பணியின் கோதுமை மணி . .சுனில் குமார்

விஷ்வவாணி பணியின் கோதுமை மணி . .சுனில் குமார்

கிறிஸ்து இயேசுவுக்குள் அன்பார்ந்தவர்களுக்கு , இமாச்சலப் பிரதேச மலையில் கோதுமை மணியாக விதைக்கப்பட்ட விஷ்வவாணி ஊழியர் சுனில் குமார் அவரது குடும்பத்திற்காக கருத்தூன்றி ஜெபிப்பதற்கு இந்த ஜெபக் கடிதம் உங்கள் கரங்களை வந்தெட்டியது .

சுவிசேஷப்பணியில் சுறுசுறுப்போடும் , மிகுந்த பாரத்தோடும் செயல்பட்டு வந்தவர் சகோ . சுனில் குமார் . 26 வயது நிரம்பிய இவர் , இமாச்சலப் பிரதேசம் - சிம்லா மாவட்டத்தின் சிர்காவ் மண்டலத்திலுள்ள தென்வாரி எனுமிடத்தில் பெப்ரவரி 2017ல் தளம் திறந்து , அங்கு வாழும் ' பஹரி ' ஜனத்தவர் நடுவில் குடும்பமாகப் பணிபுரிந்து வந்தார் .

2018 டிசம்பர் மாதத்தில் தமிழகத்திலிருந்து பணிப்பங்காளர்களுடன் இந்தச் சகோதரனின் பணித்தளத்திற்குச் சென்றிருந்தபோது இவரது ஊழிய ஆர்வம் என்னை வெகுவாய்க் கவர்ந்தது .

கடந்த இரண்டு ஆண்டுகளில் இம்மலை நாட்டில் அவர் தங்கி பணியாற்றியதென்வாரியிலும் , சுற்றியுள்ள காபால் , சவுந்தாரி , சின்டாஸ்லி , கனியாரா ஆகிய கிராமங்களிலும் கிறிஸ்து இயேசுவினுடைய சுவிசேஷத்தை வல்லமையாய்ப் பிரசங்கித்தார் .

51பேர் திருமுழுக்கு பெற்ற நிலையில் , 3 சபைகள் உருவாகவும் கர்த்தரால் பயன்படுத்தப்பட்டார் .

சனிக்கிழமை இரவு ' கோஷ்லி ' எனுமிடத்தில் இரவுக்கூட்டத்தை முடித்த பின்னர் , அங்கேயே தங்கிவிட்டு , ஞாயிறு காலை ஆராதனை நடத்தும்படி தென்வாரிக்குப் பயணப்பட்டார் , சாலைப் பயணத்தின்போது , திடீரென ஏற்பட்ட மலைச் சரிவினால் சகோ . சுனில் மற்றும் 30க்கும் மேற்பட்ட பிற பயணிகளை பெரும்கற்களும் மணல்களும் மூடி அமிழ்த்தியது ! ஒரு சிலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர் ! இரு நாட்களாய்த்தொடர்ந்த தேடுதல் பணிக்குப் பின் 20 . 08 . 2019 அன்று நம் அன்பு மிஷனெரி சுனில் குமாரின் சரீரம் மணற் குவியலுக்குள் கண்டெடுக்கப்பட்டு , 21 . 08 . 2019 அன்று அடக்க ஆராதனை இடம்பெற்றது .

வட மேற்கு மாநில உசாழிய பொறுப்பாளர் அருள்திரு . வீரேந்திர காம்ளே , இமாச்சலப் பிரதேச மாநில ஒருங்கிணைப்பாளர் அருள்திரு . பல்வந்தர் ஆகியோர் பாதிக்கப்பட்டுள்ள இக்குடும்பத்தாருக்குப் பக்கபலமான உதவிகளைச் செய்து வருகின்றனர் , கனமழையின் நிமித்தம் நெடுஞ்சாலைகள் துண்டிக்கப்பட்டிருப்பதாலும் , வாகனப் போக்குவரத்து தடையாயிருப்ப தாலும் , இவ்விரு நாட்களிலும் , இறுதி ஆராதனையிலும் இமாச்சலப் பிரதேசத்து நம் ஊழியர்களே உடனிருந்து உதவுகின்றனர் .

பணித்தலைவர்களுடன் அருள்திரு . ஆனந்த்சிங் அதிசீக்கிரத்தில் தென்வாரி தளம் செல்லவுள்ளார் .

பணியிடத்தில் கோதுமை மணியாகிவிட்ட நம் அன்பு சகோதரன் சுனில் குமாரின் வாழ்நாட்கள் , ஊழிய காலங்களுக் காக மிகுந்த நன்றியுள்ளத்துடன் தேவனைத் துதிக்கிறோம் .

துயரத்தில் வாடும் துணைவி " திருமதி . குட்டியா சுனில் ' அவர்களுக்கும் , அப்பாவின் முகம் தேடும் ' சாலேம் சின்டா ' என்ற 2வயது மகனுக்கும் நம் கண்ணீரின் ஜெபங்கள் ஆறுதலாக அமைவதாக . உடன் ஊழியர்கள் , விசுவாசிகளின் கண்ணீர்யாவையும் கர்த்தர் துடைப்பாராக .

" கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும் , செத்ததேயாகில் மிகுந்த பலனைக் கொடுக்கும் " யோவான் 12 : 24

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory