*கால்ட்வெல் நெல்லைக்கு வருவதற்கு முன்னால் இருந்த நிலை*
1810க்குப் பின்னர் வந்த *" இருண்ட காலத்தில் ஒரு வகையான "* கொள்ளைக் காய்ச்சல் , கடும் வெள்ளம் , பெரும் பஞ்சம் ஆகியவற்றால் தமிழ்நாடு முழுவதிலும் ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்தபோது , நெல்லைக் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்தது .
1828ல் தருவை பள்ளிக்கூடம் மூடப்பட்டது .
மேலும் வைதீக இந்துக்களும் நிலச்சுவான்தார்களும் அரசு அலுவலரும் இழைத்த கொடுமைகளின் விளைவாக 1829ல் இடையன்குடிக்கு அருகிலுள்ள குண்டல் , காரி கோவில் , புதூர் , உவரி , நவலடி , ஈச்சங்குடி போன்ற இடங்களில் வாழ்ந்து வந்த சுமார் 2000 பேர் கிறிஸ்துவை மறுதலித்து விட்டனர் .
அரசாங்கம் நிர்ணயித்த தீர்வைக்கு மிஞ்சி காசு கொடுக்க மறுத்த கிறிஸ்தவர்கள் மீது இடையன்குடியிலுள்ள கர்ணம் , மிராசுதார் முதலியவர்கள் பொய் வழக்குகள் தொடுத்து , உபதேசியாரையும் சபையார் சிலரையும் பாளையங்கோட்டையிலும் மதுரையிலும் சிறையிலடைத்துத் துன்புறுத்தினர் .
எனினும் இடையன்குடி , அதன் அருகிலுள்ள பொத்தக்காலன்விளை ( இன்றைய அருள் நகர் ) மற்றும் கைலாசபுரம் சபை மக்கள் இயேசுவை மறுதலிக்கவில்லை .
1839ல் கோலாஃப் ( C . S . Kohlhoff ) ஐயரும் 1840 முதல் ஹேய்ன் ( G , Y . Heyne ) ஐயரும் முதலூர் மிஷனெரிகளாக இருந்த பொழுது , இடையன்குடியும் அதைச் சுற்றியிருந்த கிராமங்களும் தனிசேகரமாக இயங்காமல் முதலூர் சேகரத்தின் ஒரு பாகமாகக் கருதப்பட்டன .

No comments:
Post a Comment