புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

றிஸ்தவர்களுக்குள் சாதி வேறுபாடு -இந்த ஜாதிப் பிசாசு

கிறிஸ்தவர்களுக்குள் சாதி வேறுபாடு -இந்த ஜாதிப் பிசாசு ''

1860ல் இடையன்குடி சேகரக் கிறிஸ்தவர்களுக்குள் சாதி பேதம் பார்க்கும் தீமை அதிகரித்தது .

மனம் நொந்துபோன கால்ட்வெல் அதை மிகவும் எதிர்த்தார் ;

பிரசங்கங்கள் மூலமாகவும் தனி நபர்களுடன் உரையாடுதல் மூலமாகவும் பிரச்சினையை அவர் மேற்கொண்டார் .

தங்களுக்குள் வித்தியாசம் பாராட்டுவதில்லையென்று மக்கள் வாக்குக் கொடுத்தனர் .

பல்வேறு சாதியைச் சார்ந்த கிறிஸ்தவர்களும் சமபந்தியில் அமர்ந்து தாழ்த்தப்பட்ட வகுப்பினர் ஒருவர் சமைத்த உணவை உண்டனர் .

ஆனால் மக்கள் கொடுத்த வாக்குறுதி என்ன ஆயிற்று ? 3ஆண்டுகளுக்குள் , அதாவது 1863ல் , மற்றொரு பிரச்சினை தோன்றிற்று :

குறிப்பிட்ட ஒரு மிஷன் கிணற்றிலிருந்து தாழ்த்தப்பட்ட மக்கள் தண்ணீர் இறைக்கக்கூடாது என்றொரு பிரச்சினை .

வேதனையுற்ற கால்ட்வெல் கண்டிப்பான சில சட்ட திட்டங்களை வகுத்து விளம்பரப்படுத்தினார் ; மக்கள் அவற்றை மீறாதபடி கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொண்டார் .

சபையாரில் பெரும்பாலானவர்கள் கால்ட்வெலின் சொல்லை நல் மனதுடன் ஏற்றுக் கொண்டனர் .

ஆயினும் செயல் அளவில் அதை ஏற்றுக் கொண்டபோதிலும் மனத்தளவில் அதை எதிர்த்த சிலர் இன்னும் இருந்தனர் போலும் ! 140 ஆண்டுகளுக்குப் பின்னர் கிறிஸ்துவின் திருச்சபையின் நிலை என்ன ? பொதுவாக அன்றாட வாழ்வில் தமிழ்க்கிறிஸ்தவர்கள் சாதி பேதம் பார்ப்பதில்லை .

ஆனால் திருமணத்திற்கு வரன் தேடும் நேரங்களில் ?

இந்தக் கட்டத்தில் தேவனுடைய ஊழியர் கால்ட்வெலைப் பற்றி ஷாரக் ( J . A . Shalirrock ) ஐயரின் கூற்று குறிப்பிடத்தக்கது :

*" உலக ஞானம் மிக்க அந்தணர்களுக்கும் கல்வியறிவில்லாத ' பட்டிக்காட்டு மக்களுக்கும் இரு சாராருக்கும் ஒன்று போல அன்பு காட்டின மிஷனெரி கால்ட்வெல் . ' '*

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory