புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

தேவசகாயம் உபதேசியார்(

*இடையன்குளத்தை மையமாகக் கொண்ட CMS மிஷன் பணி (9)*

*இடையன்குளத்தின் முதல் சபைஊழியர் தேவசகாயம் உபதேசியார்(1807-1906)*

கனம்.இரேனியஸ் ஐயரவர்களின் CMS மிஷன் சார்பு நற்செய்திப்பணியால் 1827 ல் இடையன்குளத்தில் பத்து குடும்பத்தார் கிறிஸ்தவரானதும்
இடையன்குளம் மக்களுக்கு தொடர்நற்செய்திப்பணி செய்யவும் இடையன்குளத்தாரை மறவரது துணைகொண்டு அச்சுறுத்தி நிலபுலன்களை சூறையாடி வந்த பண்ணையார் ஓமநல்லூர் பத்தமடையாப்பிள்ளை கொடுத்த துன்பங்களில் உதவிபுரியவும் தேவபக்தியும் தைரியமும் கொண்ட ஆழ்வாநேரி வாலிபரான தேவசகாயம் உபதேசியார் 1827 ல் இடையன்குளத்திற்கு நியமிக்கப்பட்டார்.
இடையன்குளம் நல்லதம்பி நாடார் மகள் கோயில்பிள்ளையைதம் பணிக்காலத்தில் அவர் திருமணம் செய்தார். இவரால் சொல்லப்பட்டு இவரது மகள்(மரியம்மை) வழி பேரன் கனம்.V.A.தாவீது ஐயரவர்களால் எழுதப்பட்ட
*"தேவசகாயம் உபதேசியார் சரித்திரம்"* நூல் மூலம் உபதேசியாரது வரலாறு மட்டுமல்லாது அவர் பணிசெய்த இடையன்குளம்
வடலிவிளை
மூன்றடைப்பு
மருதகுளம்
பாணான்குளம்
புதுக்குளம்
காலாங்கரை
மேலக்குளம்
கீழப்பாட்டம்
மணப்படைவீடு ஆகிய
சபை வரலாறுகள்,

1838 வரை வடலிவிளையில் உபதேசியார் ஆக அவர் பணிசெய்த போது வடலிவிளைக்கு *அய்யாவழி*
மார்க்கம் போதிக்க வந்த *அய்யா முத்துக்குட்டிசுவாமிகள் வரலாறு(1809 - 1851)* முத்துக்குட்டி சுவாமிகளை வடலிவிளையில் எதிர்கொள்ள நீண்டவிடுமுறையை மிஷனில் பெற்று அவர் திருவாங்கூர் சென்று வைத்தியம், வர்மம், சிலம்பம், கற்றுவந்தது (அய்யா முத்துக்குட்டிசுவாமிகளின் அய்யாவழி நிழல் தாங்கல் பணி வடலிவிளையோடு நின்றுவிட்டது வடலிவிளைக்கு தெற்கே அவர் செல்லவில்லை).

மருதகுளம் இராமநாடார் என்ற ஏனோக்கின் இரத்தசாட்சி வரலாறு ஆகியவற்றை அறியமுடிகிறது.

இறைபற்றுறுதியிலும் வீரஉணர்விலும் இடையன்குளத்தார் சிறந்து விளங்க தேவசகாயம் உபதேசியாரே மூலகாரணம் என்றால் மிகையாகாது தேவசகாயம் என்ற பெயரை இடையன்குளத்தில் அதிகமானோருக்கு சூட்டியிருப்பது மூலம் தம் நன்றியை வெளிப்படுத்தியுள்ளனர்.

1807 ல் ஆழ்வானேரியின் பூர்வீக இருகுடும்பங்களில் ஒன்றான சுவாமியடியான் ஆட்கொண்டான் குடும்பத்து ஈழப்பெருமாள்ஆட்கொண்டான்நாடாருக்கும் மற்றொரு பூர்வகுடும்பமான பெரியநாடார் குடும்பத்து மாடிப்பிள்ளைநாடாத்திக்கும் மகனாக சுப்பிரமணியன் என பிறந்த அவர் ரேனியஸ் ஐயரவர்கள் நற்செய்தியால் தேவசகாயம் என ஞானஸ்நானம் பெற்றார் தம் 100 ஆம் வயதில் 1906 ல் உடன்குடி கிறிஸ்தியாநகரத்தில் தம் இளையமகன் கனம்.பவுல் ஐயரவர்களது வீட்டிலிருக்கையில் மரணமடைந்து அங்கேயே அடக்கம் செய்யப்பட்டார்.

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory