புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

ஜெசிமன் பிராண்ட்

*எப்படியாகிலும் கிறிஸ்துவின் அன்பை அறிவிக்க உந்தப்பட்ட ஜெசிமன் பிராண்ட்*

கொல்லிமலை , இது ஒரு ஆட்கொல்லி மலை , 1919ஆம் ஆண்டு . கொல்லிமலையில் விஷக்காய்ச்சல் எங்கும் பரவியது , பலர் நோயின் பிடிக்குள் சிக்கி , தங்கள் உடல் பெலத்தை இழந்து பரிதாபமாகச் செத்து மடிந்தனர் .

இவ்விதமான காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒருகல சம் தண்ணீர் கூட யாரும் கொடுக்க முன்வரவில்லை .

காரணம் , அந்நோய் தங்களையும் தொற்றிவிடும் என்ற பீதியேயாகும் , ஜெசிமண்ட் தம்பதியினர் அந்நோய் தாக்கியவர்களைத் தேடிக் கண்டுபிடித்து தங்கள் வீட்டில் அடைக்கலம் கொடுத்து , அரிசி கஞ்சியை ஆயத்தப்படுத்தி அவர்களுக்கு உணவுகளைப் பரிமாறினார் .

மிக ஆபத்தான காட்டு மிருகங்களும் நாட்டு மிருகங்களும் நிறைந்த பகுதி .

இந்து மத பூசாரிகளும் மந்திரவாதிகளும் தங்கள் கொள்கைகளையும் , தந்திரங்களையும் மக்களிடையே திணித்துக் கொண்டு தங்களையும் மக்களையும் முட்டாளாக்கிக் கொண்டிருந்தனர்.

எப்படியாகிலும் கிறிஸ்துவின் அன்பை அறிவிக்க உந்தப்பட்ட ஜெசிமன் அம்மக்களுக்காக மருத்துவ உதவியுடன் சுவிசேஷத்தையும் அறிவித்தார் .

பள்ளி ஒன்றையும் நிறுவினார் . கட்டிடம் கட்டும் முறைகளையும் பயிர்களை விளையச் செய்யும் முறைகளையும் , எளிய விதங்களில் கற்றுக் கொடுத்தார் .

மக்கள் அவரின் அனைத்து உதவிகளையும் ஏற்றுக் கொண்டனரே தவிர அவர் போதித்த இயேசுகிறிஸ்துவின் சத்தியத்தை ஏற்றுக்கொள்ள முன் வரவில்லை .

ஆனாலும் அவர் சோர்வில்லாமல் உழைத்தார்.

ஒரே வருடத்தில் 90 கிராமங்களுக்குச் சென்று 4 , 000 பிரசங்கங்களைச் செய்தார் . 25 , 000 மக்களுக்கு மருத்துவ உதவிகளை செய்தார் .

ஒன்றன்பின் ஒன்றாக மக்கள் சுவிசேஷத்தை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தனர் .

ஜெசிமன் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை .

இந்த ஆனந்தம் சீக்கிரமே கடந்து சென்றது . அங்கு பரவிய கருப்பு நீர் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுதான் பணி செய்த கொல்லிமலையிலேயே 1928ஆம் ஆண்டு மரித்து கோதுமை மணியானார்.

இவர் ஈவ்லின் பிராண்ட் என்பவரின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது .

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory