புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

சாகா வரம் பெற்ற *"குணப்படு பாவி "* என்ற பாடலுக்கு சொந்தகாரர். ஞா . சாமுவேல்

சாகா வரம் பெற்ற *"குணப்படு பாவி "* என்ற பாடலுக்கு சொந்தகாரர். ஞா . சாமுவேல்

மாலை நேரம் கதிரவனின் ஒளி மங்கி மறைந்து கொண்டிருந்தது .

பாதை வழியே நடந்து கொண்டிருந்த போதகர் கண்ணில் பட்டது ஒரு சிறு காகிதத் துண்டு .

அதை எடுத்து அவர் கண்ணுக்கு அருகில் வைத்துக்கொண்டு படித்தார் . அதில் ஒரு வசனம் . *" என் மீட்பர் உயிரோடிருக்கிறார் . "* ( யோபு . 19 : 25 ) என்பது தான் அந்த வசனம் .

மனச் சோர்வோடு வீடு நோக்கி நடந்து கொண்டிருந்த அந்தப் போதகருக்கு அவ்வசனம் புத்துணர்வையும் , புது உற்சாகத்தையும் , புதுமை யான சிந்தனையையும் கொடுத்து , அடுக்கடுக்காகத் தமக்கு வந்து கொண்டிருந்த துன்பங்களைக் கண்டு பரிதவிக்கவோ , பாரங்களைப் பகிர்ந்து கொள்ளவோ எவருமே இல்லையா ? என் ஆண்டவரும் கூட என்னிடம் பேசாமல் இருக்கின்றாரோ ? என்று புலம்பிக் கொண்டிருந்த அவருக்கு இந்த வசனம் ஆண்டவர் உற்ற துணை என்பதையும் , கைவிடாத மீட்பர் என்பதையும் , உயிரோடிருக்கிறார் என்ற உண்மையையும் உணர்த்திக் காட்டியது .

அவர் உள்ளத்திலிருந்து பாடல் வரிகள் பீறிட்டு வெளிவந்தன . *" என் மீட்பர் உயிரோடிருக்கையிலே எனக்கென்ன குறையுண்டு நீ சொல் மனமே . கவலைகள் தீர்ப்பார் . கண்ணீர் துடைப்பார் . கடைசி மட்டும் கைவிடாதிருப்பார் . "*

கருத்தாழம் மிக்க இப்பாடல் வரிகள் , துன்பமும் , துக்கமும் சோர்வும் நம்மைச் சூழ்ந்திடும்போது , நமக்கு ஆறுதலும் , ஊக்கமும் தந்திடும் அரும் மருந்தாக காணப்படுகின்றது .

இவர் , தரங்கம்பாடி , பெங்களூர் ஆகிய இடங்களில் இறையியல் கல்லூரியில் பேராசியரியராகப் பணியாற்றியவர் .

பல மாணவர்களுக்கு முறைப்படி தமிழ் கற்பித்தவர் .

இசையில் ஆர்வம் உடையவர் . கவிதைகளும் , பாடல்களும் எழுதும் ஆற்றல் பெற்றிருந்தவர் .

இப்போதகரின் சாகா வரம் பெற்ற *" குணப்படு பாவி "* என்ற பாடலும் , பிறரை பாவங்களிலிருந்து விலக்கி கிறிஸ்துவண்டை ஈர்ப்பதாக காணப்படுகின்றது .

இயேசு கிறிஸ்துவையே தன் வாழ்நாளில் உறுதியாக பற்றிக் கொண்ட இவர் , அழகு தமிழில் ஆண்டவரைப் புகழ்ந்து பாடிய பாடல்கள் ஏராளம் .

திருச்சபைகளில் இப்பாடல்களால் , கிறிஸ்துவண்டை வந்தவர்களும் எண்ணற்றவராவர் . *" ஆண்டவரின் ஐந்து காயங்களே அடியேனின் அடைக்கலம் , "* என்று கூறிய இவர் நெடுங்காலம் வாழ்ந்து மரணத்தை ஆதாயமாக ஏற்றுக்கொண்டார் .

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory