புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

இடையன்குடியை மனையளவை செய்த கால்டுவெல்

*இடையன்குடியை மனையளவை செய்த கால்டுவெல்* (Survey)

*கிராம சீரமைப்பு*

*மரத்தில் ஏறி மனையளவை செய்தார்*

1842 ஆம் ஆண்டில் ஒரு நாள் .

உயரமான ஒரு மரத்தில் 28 வயது- நிரம்பிய கால்ட்வெல் பாதிரியார் சிரமத்துடன் ஏறினார் .

மா , கொய்யா மரங்களில் கூட ஏறியறியாதவர் அவர் : பழங்கள் பறித்துக் கொடுக்க , பணம் கொடுத்து ஊர் இளைஞரைக் கேட்டுக் கொள்ளும் வழக்கமுடையவர் .

அவர் அன்று ஒரு நோக்கத்துடன் மரத்தில் ஏறினார் : மரத்தின் உச்சியிலிருந்து இடையன்குடி கிராமத்தைக் கால்ட்வெல் ஐயர் மனையளவை ( survey ) செய்தார் .

கீழே இறங்கியபின் எதிர்கால இடையன்குடி எப்படி அமையவேண்டுமென்று திட்டம் தீட்டி அதன்படி செயல்படத் தொடங்கினார் .

*' ' அடிமை "* வாழ்விலிருந்து விடுதலையும்

கிராம சீரமைப்பும் பணிந்து குனிந்து நுழைந்தாலும் தலையைப் பதம் பார்க்கும் தாழ்வான நுழைவாயில்களுடன் , ஜன்னல்களே இல்லாத இருட்டு வீடுகளே இடையன்குடி கிராமத்தில் இருந்தன .

இவ்வீடுகள் அனைத்தையும் கால்ட்வெல் கிரயத்திற்கு வாங்கினார் .

சில சந்தர்ப்பங்களில் வில்லங்கங்கள் காரணமாக ஒரே இடங்களைக் கால்ட்வெல் மீண்டும் மீண்டும் வாங்கியதும் உண்டு .

இவ்வாறு கிராமம் முழுவதையும் கால்ட்வெல் விலைக்கு வாங்கிவிட்டார் .

ஆயினும் தாங்களே இந்த இடங்களின் பூர்வீகச் சொந்தக்காரர்கள் என்று செல்வந்தரான சில நாடார்கள் உரிமை கொண்டாடினர் .

இடையன்குடி கிராமத்தின் பெரும்பாலான மக்கள் அதே இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்த போதிலும் இவர்கள் ஏற்கெனவே அந்தப் பூர்வீகச் சொந்தக்காரர்களுக்கு மனை வாடகை ( ground rent ) செலுத்தி வந்தனர் .

மேலும் இவர்களுடைய இல்லங்களிலே திருமணம் போன்ற சிறப்பு வைபவங்கள் வரும்போது இந்த அடிமைகள் அந்த எசமானருக்கு ஒரு சிறு கட்டணம் கொடுத்துவந்திருக்கின்றனர் .

ஆகவே அந்தப் பணக்காரர்கள் , இடையன்குடி கிராமத்தார் தங்களுக்குத் தரை வாடகையும் திருமணக் கட்டணமும் தொடர்ந்து தரவேண்டுமென்றனர் .

இது சட்டப்படியாகச் செல்லுமா என்று ஆராய்ந்து நாளை வீணாக்காமல் , அவர்களுக்குப் பெருந்தொகைகளை மொத்தம் மொத்தமாகக் கொடுத்து , கால்ட்வெல் இந்த அடிமை மக்களை மீட்டார் .

பின்பு அகலமான , நேரான , ஒன்றுக்கொன்று இணையாகச் செல்லும் தெருக்களை அமைத்து , ஜன்னல்கள் பொருத்திய சில மாதிரி வீடுகளைக் கட்டி , மக்களை அவற்றில் குடியிருத்தி பெருமகிழ்ச்சியடைந்தார் கால்ட்வெல் ! மேலும் பொருத்தமான இடங்களிலே கால்ட்வெல் கிணறுகள் தோண்டினார் ; பலவகை மரங்களை நாட்டி கருத்துடன் வளர்த்தார் .

அருகிலுள்ள மற்றக் கிராமங்களும் இந்த மாதிரி ' ( model ) கிராமத்தைப் போல அமைய முயற்சித்தார்.

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory