புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

இடையன்குடி பழைய ஆலயம்

இடையன்குடி பழைய ஆலயம்*

கால்ட்வெல் இடையன்குடிக்கு வந்த பொழுது அங்கிருந்த ஆலயம் 1829ல் ரோசன் ( Rosen ) ஐயரினால் கட்டப்பட்டது .

66 அடி நீளம் , 30 அடி அகலத்தில் 60 , 000 சுடாத செங்கலினால் அமைக்கப்பட்ட அந்த ஆலயத்திற்கு மொத்தக் கட்டுமானச் செலவு சுமார் ரூ . 142 .

இந்த இடம் போதுமானதாக இல்லாததால் கால்ட்வெல் வேறு ஒரு கோவிலைக் கட்டினார் .

இந்தக் கோவில் 5 தடவைகள் மேலும் மேலும் விரிவாக்கப்பட்டது .

இடையன்குடி புதிய ஆலயம் இச்சூழ்நிலையில் இடையன்குடியின் பெரிய சபையார் இன்று வரை வசதியாகப் பயன்படுத்தி வருகின்ற 85 அடி நீளம் , 52 அடி அகலமும் ,கிராதிப் பகுதி 35 அடி நீளம் , 23 அடி அகலமும் கொண்ட பெரிய ஆலயத்திற்கு கால்டுவெல் 1848 அக்ற்றோபரில் அஸ்திபாரமிட்டார் .

அது மணற்பாங்கான இடமாக இருந்ததால் அஸ்திபாரம் வெகு ஆழத்தில் போடப்பட்டது .

அதைக் கட்டுவதற்கு 3 அல்லது 4 ஆண்டுகள் ஆகலாமென்று கால்ட்வெல் எதிர்பார்த்தார் ; 32 ஆண்டுகள் ஆகுமென்று அவர் கனவிலும் எண்ணவில்லை !

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory