புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

ஃபென்றன் பண்ணையும் ( Fenton Estate ) ஃபென்றன் குளமும்

*ஃபென்றன் பண்ணையும் ( Fenton Estate ) ஃபென்றன் குளமும் உருவான வரலாறு*

இங்கிலாந்தில் திருப்பணியாற்றி வந்தவர் ஃபென்றன் ( J . M . Fenton ) எனும் ஓர் ஐயர் . அவருடைய மனைவியும் மகளும் திடீரென்று இறந்துவிட்டனர் .

கவலையில் ஆழ்ந்திருந்த ஐயரிடம் இடையன்குடியின் தேவைகளைப் பற்றி இசபெல்லா கால்ட்வெல் எழுதிய கடிதம் கிடைத்தது உடனே அவர் கால்ட்வெலுக்கு 100 பவுன் அனுப்பினார் .

அதிலிருந்து வரும் வட்டியை இடையன்குடி பெண் பள்ளிவிடுதியிலிருக்கும் ஒரு அனாதைப் பெண்ணின் ஆதரவுக்குப் பயன்படுத்த வேண்டுமென்றும் , இவ்வாறு தொடர்ந்து பயன்பெறும் அனாதைப் பிள்ளைகளுக்குத் தன் மனைவியின் பெயரையும் மகளின் பெயரையும் மாறி மாறி வைக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார் .

ஃபென்றன் ஐயர் அனுப்பிய 100 பவுன் ரூ . 1060க்குச் சமம் .

அந்தப் பணத்தை அரசு சேமிப்பு நிதிகளில் போட்டு வைத்தால் , விலைவாசி கூடும்பொழுது கிடைக்கும் வட்டித்தொகையின் பணமதிப்பு குறைந்துவிடுமே என்றெண்ணினார் கால்ட்வெல் .

ஆகவே அந்தப் பணத்தைக் கொண்டு கூடன்குளம் அருகே அரசாங்கத்திடமிருந்து பெரிய புறம்போக்கு நிலம் ஒன்றைச் சலுகை விலைக்கு வாங்கினார் .

அதில் ஒரு குளம் வெட்டி , மழை நீரையும் மலையிலிருந்து வரும் தண்ணீரையும் தேக்கினார் .

அந்தத் தண்ணீரைக் கொண்டு முதல் ஆண்டிலேயே மூன்றரை ஏக்கரில் நெல் சாகுபடி செய்தார் .

தொடர்ந்து சாகுபடியை அதிகரிக்கத் திட்டமிட்டார் .

இன்றைய ஃபென்றன் பண்ணையும் ஃபென்றன் குளமும் உருவான வரலாறு இதுவே .

இடையன்குடியைச் சேர்ந்த ஞானமுத்து ஐயர் புதுக்கோட்டையில் திருப்பணியாற்றிவரும் பொழுது 1860ல் திடீரென்று காலமானார் .

அவருக்கு 6 அல்லது 7 பிள்ளைகள் , கால்ட்வெல் ஐயர் அதில் ஒரு பிள்ளையைப் பள்ளி விடுதியில் சேர்த்து , ஃபென்றன் ஐயரின் மனைவி மேரியின் பெயரை அவளுக்கு இட்டார் .

அந்தப் பிள்ளை படித்து முடித்து அங்கேயே வேலை செய்து , குடும்பத்தை ஆதரித்தாள் .

அதன் விளைவாக அவளுடைய சகோதரர் இருவர் பின் நாளிலே குருப்பட்டம் பெற்றனர் .

துயரத்தின் மத்தியிலும் ஃபென்றன் ஐயர் விதைத்த சிறு விதை வளர்ந்து மரமாகிக் கனிகொடுத்தது .

துயரத்திலிருந்த ஞானமுத்து ஐயரின் குடும்பம் மீண்டும் தழைத்தோங்கிற்று .

மேலும் ஃபென்றன் பண்ணையின் வருமானம் திருச்சபைக்கு இன்றும் பயன்பட்டு வருகிறது .

விண்ணரசின் வளர்ச்சி சிறு விதையின் வளர்ச்சியைப் போன்றது என இயேசு சொன்ன உவமை உருவகப்படுவது இவ்வாறே ஆகும் ! ( லூக் 13 : 18 , 19 )

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory